ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்: தமிழிசை சவுந்திரராஜன்
திருப்பதி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் 13ம் தேதி ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் சுப்பிரமணியன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
‘ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிகார வர்க்கத்தின் பலத்தை எதிர்க்கொள்ள வேண்டுதல் செய்தோம். ஆளும் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பொய் காரணங்களை கூறி பாஜக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய மேற்கொண்ட முயற்சியில் நாங்கள் முதல் வெற்றி பெற்றுள்ளோம். பாஜகவின் வளர்ச்சியை பார்த்துதான், காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாமல், பாஜக வேட்பாளரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் எங்கள் கட்சியின் மாநில தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் பாஜக மாற்று சக்தியாக உருவெடுக்கும்' என்றார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications