வீட்டில் தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி?வெளியான முக்கிய தகவல்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று திடீரென்று நெற்றியில் காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தவறி விழுந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் வீட்டில் யாரும் அவரை தள்ளிவிட்டனரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மருத்துவமனை முக்கிய விளக்கம் தந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். இவருக்கு வயது 69. இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி இன்று நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பான போட்டோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. அதில் மம்தா பானர்ஜி காயமடைந்துள்ளார். அவருக்கா பிரார்த்தனை செய்யுங்கள் என கூறப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதிவில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் ரத்தம் வழிந்தது.
இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர் அரசு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நெற்றியில் அவருக்கு தையல் போடப்பட்டது. அதன்பிறகு சில மணிநேரம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த மம்தா பானர்ஜி அதன்பிறகு வீடு திரும்பினார். வீல்சேரில் அமர்ந்தபடி தலையில் கட்டுடன் மம்தா பானர்ஜி வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி காயம் பற்றி குடும்பத்தினர் கூறுகையில், ‛‛மம்தா பானர்ஜி நேற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் இல்லத்துக்கு திரும்பினார். அங்கு அவர் இருந்தபோது கால்தவறி விழுந்து காயமடைந்தார்'' என்றார். மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான அரசு அதிகாரி தரப்பில், ‛‛நெற்றியில் காயமடைந்த மம்தா பானர்ஜிக்கு தையல்கள் போடப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நலம் சீராக இருந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.இரவில் நன்றாக தூங்கி உள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் சிகிச்சை அளித்த எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை முக்கிய விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய், ‛‛மம்தா பானர்ஜி தனது வீட்டில் கீழே விழுந்து நெற்றியில் காயமடைந்துள்ளார். பின்னால் இருந்து தள்ளுவது போன்று திடீரென்று உணர்ந்துள்ளார். இதையடுத்து தான் அவர் கீழே விழுந்து நெற்றியில் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்'' என்றார்.
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியை யாரேனும் பின்னால் இருந்து தள்ளிவிட்டனரா? என்ற கேள்வி எழுந்தது. இதனை போலீசார் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மம்தா பானர்ஜியை யாரும் பின்னால் இருந்து தள்ளிவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் எதுவும் வழங்கப்பட்டுள்ளதா? விசாரணை நடத்தப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் அப்படி எந்த புகாரும் பதிவு செய்ப்படவில்லை. இத்தகைய சூழலில் மம்தா பானர்ஜிக்கு ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது வீட்டை சுற்றி பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications