ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. 3 பக்தர்கள் பலி.. பலர் காயம்
புவனேஷ்வர்: பூரி ஜெகன்நாதர் கோவிலில் இன்று ரதயாத்திரை நடந்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிந்தும் போதிய ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை என்று அங்கிருந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ரத யாத்திரையில் ஒடிசா மக்கள் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் செல்வதை காண முடியும்.

இந்த நிலையில்தான், ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெகன்நாதர் கோயில் அருகே உள்ள ஸ்ரீ குண்டிகா கோயிலில் ரதங்கள் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரதங்கள் குண்டிகா கோயிலை நெருங்கிய போது, தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிலர் கீழே விழுந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசல் உண்டாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பிரபாதி தாஸ், பசந்தி சாஹு ஆகிய இரண்டு பெண்களும், 70 வயதான பிரேமகாந்த் மொஹந்தி என்பவரும் அடங்குவர். இவர்கள் மூவரும் ஒடிசாவின் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ரத யாத்திரைக்காக பூரிக்கு வந்திருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிந்தும் போதிய ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை என்று அங்கிருந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications