ஓகி புயல் குறித்து ஒன்னுமே சொல்லல.. ஹைதராபாத் வானிலை மையம் மீது கேரள முதல்வர் பாய்ச்சல்
ஓகி புயல் குறித்து எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என ஹைதராபாத் வானிலை மையம் மீது கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: ஓகி புயல் குறித்து எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என ஹைதராபாத் வானிலை மையம் மீது கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் தென் தமிழகத்தைம் தெற்கு கேரளாவை ஒரு கை பார்த்துவிட்டது. நேற்று பிற்பகலுக்குப் பின் கன்னியாகுமரியை விட்டு நகரத் தொடங்கிய ஓகி புயல் தற்போது லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் தென் மாவட்ட அணைகள் மளமளவென நிரம்பியுள்ளது.

கேரளாவிலும் கனமழை
ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் தெற்கு கேரளாவிலும் மழை வளைத்து அடித்தது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

படகுகள் சேதம்
பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

எச்சரிக்கை விடுக்கப்படவில்லை
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓகி புயல் குறித்து கேரள அரசுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சீரியஸாக செயல்படவில்லை
பேரிடர் மேலாண்மை பிரிவு ஓகி புயல் விவகாரத்தில் சீரியஸாக செயல்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிற்பகலில்தான் எச்சரிக்கை
ஹைதரபாத் வானிலை மையம் சரியான நேரத்திற்கு எச்சரிக்கை விடுக்காததே சேதத்துக்கு காரணம் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். வியாழக்கிழமை பிற்பகலில்தான் புயல் குறித்த எச்சரிக்கை வந்ததாக கூறிய அவர் எச்சரிக்கை தாமதமாக வந்ததால்தான் சேதம் அதிகமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

35 மீனவர்கள் மாயம்
இதனால் மீனவர்கள் கரைதிரும்ப முடியாமல் போனதாகவும் முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் ஓகி புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 35 பேருடன் சென்ற 3 படகுகள் மாயமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications