இரண்டாவது திருமணமா? அரசின் அனுமதி கண்டிப்பா வேணும்! அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு செக்
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை இன்னமும் அமலில் இருக்கும் நிலையில், இதை தடுக்க தற்போது புதிய உத்தரவு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் யாரேனும் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் எனில் அரசின் அனுமதி அவசியம் என எச்சரித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அசாம் மிக முக்கியமான மாநிலமாகும். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பண்பாட்டு பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் திருமண வயது என்பது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்பவர்கள் சட்டப்படி தண்டனைக்கு ஆளாவார்கள். ஆனால் இன்னமும் அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

இதற்கு எதிராக அரசு சமீபத்தில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல மாநிலம் முழுவதும் பரவலாக பலதார திருமண முறை அமலில் இருக்கிறது. இது திருமணத்தை மீறிய உறவு தொடர்பான குற்றங்களுக்கும், பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறை குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. எனவே இதனை சரி செய்ய பலதார திருமண முறையை ஒழிக்க அரசு தயாராகி வருகிறது. இதற்கான சட்டங்கள் விரைவில் இயற்றப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது புதிய உத்தரவு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது அசாம் மாநிலத்தின் அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவத திருமணம் செய்யக்கூடாது. அதேபோல இரண்டாவது திருமணத்திற்கு அரசின் அனுமதி பெறுவது அவசியமாகும். அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது செய்வது சட்டவிரோதமானது. இந்த உத்தரவு ஆண்/பெண் என அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று மாநில அரசு கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தனிப்படை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஜ் வர்மா அக்டோபர் 20 அன்று வெளியிட்டார்.
ஒருவேளை இந்த விதிகளை மீறும் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்று இந்த புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை திருமணங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், பலதார திருமண முறைக்கு எதிரான சட்டங்கள் ஆகியவை அசாமில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications