சிறுமியை பலாத்காரம் செய்து பிறந்த குழந்தையை கொன்ற வளர்ப்புத் தந்தைக்கு ஆயுள்!
தானே: மகள் முறையுள்ள சிறுமி என்றும் பாராமல் தொடர் பலாத்காரம் செய்து செய்து, அதன்மூலம் பிறந்த குழந்தையை கொலை செய்த வளர்ப்புத் தந்தைக்கு ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் வால்மீகி தோரட். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 13 வயது மகளை, வால்மீகி தோரட் பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார் தோரட். தொடர் பலாத்காரத்தினால் அந்த சிறுமி கருவுற்றார். இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் தாயாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் தோராட்.
2009ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். இதனையடுத்து இரக்கமில்லாத வால்மீகி தோரட் அந்த குழந்தையை கொன்று உடலை கழிவுநீரோடையில் வீசினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வால்மீகி தோரட்டை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இறந்த குழந்தைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வால்மீகி சாதித்தார். ஆனால் மரபணு சோதனையில் இறந்த குழந்தை வால்மீகிக்கு பிறந்ததுதான் என்று உறுதி செய்யப்பட்டது.
வால்மீகியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையின் முடிவில் வால்மீகி தோரட்டுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications