ஸ்டெர்லைட் வழக்கு: பசுமை தீர்ப்பாயமே விசாரிக்கலாம்.. அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்து தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்து தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் சீராய்வு பணிகளை செய்ய அனுமதித்தது.

Sterlite Case: SC dismisses the TN Govt case against National Green Tribunal

அதன்பின் அந்த ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டு இருந்த அரசு ஆணையை ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டது. இதனால் ஸ்டெர்லைட் வழக்கை பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசின் வழக்கை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். ஸ்டெர்லைட் வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கை பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதில் தவறில்லை. எந்த காரணத்தை வைத்து பசுமை தீர்ப்பாயம் இதை எதிர்க்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் ஸ்டெர்லைட்டில் ஆய்வு பணியை மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

6 வாரத்திற்குள் குழு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. தற்போது இந்த ஆய்வு பணிக்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+