மோடி ஏன் மௌனம்?.. டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானது அதிமுக அரசு.. சவாலை பிரதமர் ஏற்பாரா?.. காங். கேள்வி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மோடி மௌனமாக இருப்பது ஏன் என்றும் டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானது அதிமுக அரசு என்ற சவாலை பிரதமர் ஏற்பாரா என்று காங்கிரஸ் கேட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானது அதிமுக அரசு என்ற சவாலை பிரதமர் ஏற்பாரா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பேராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 அப்பாவிகள் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை, பெங்களூரில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அபிஷேக் சிங்வி கேள்வி
இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மோடி ஏன் பாராமுகமாக இருக்கிறார். ஏன் மெளனமாக இருக்கிறார்.

ஆலை அமைப்பது
ஸ்டெர்லைட் ஆலை உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. ஆலை அமைப்பது தொடர்பாக உள்ளூர் மக்கள் கருத்தையும் கேட்கவில்லை. மக்களுடன் பேசக் கூட பிரதமருக்கு நேரம் இல்லையா. மராட்டியத்தில் இருந்து விரட்டப்பட்ட ஆலையை தமிழகத்தில் அனுமதித்தது யார்?

வீடியோவில் பதிவு
பாதுகாக்கப்பட்ட கடல்பகுதியில் இருந்து 25 கி.மீ.க்குள் ஆலையை அனுமதித்தது ஏன். துப்பாக்கிச் சூடு நடத்தும்போது ஒருவராவது சாக வேண்டும் என்று போலீஸ் கூறுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக யாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

டிஸ்மிஸ் செய்வதற்கு...
ஆட்சியர், எஸ்.பி.யை தமிழக அரசு இடம் மாற்றியது வெறும் கண்துடைப்பு நாடகம் ஆகும். டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானதுதான் அதிமுக அரசு என்ற சவாலை பிரதமர் ஏற்பாரா என்று அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications