ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை- பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி
வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Recommended Video

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையினால், சுகாதார சீர்கேடு, மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிறைய ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர், இதையடுத்து, அந்த கடந்த மே மாதம் 28ம் தேதி அந்த ஆலை மூடப்பட்டது. நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இறுதியில் ஆலைக்குகே தமிழக அரசு சீல் வைத்தது.

இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்த பாதிப்பும்
ஏற்படவில்லை என தெரிவித்திருந்தது.
இந்த ஆலை மூடப்பட்டால் ஏராளமான ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதுடன், அவர்களின் குடும்பங்களும் மிகவும் சிரமப்படும் என்பதால்,ஆலையை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தது. மேலும் ஆலையை திடீரென மூடிவிட்டதால், ஆலைக்கும், இயந்திரங்களுக்கும் பல்வேறுவிதமான மிரட்டல்கள் வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் சார்பில் அரிமாசுந்தரமும் அரசு தரப்பில் வைத்தியநாதனும் வாதிட்டனர். அரிமா சுந்தர் வாதிடுகையில் முன் எச்சரிக்கை ஏதும் இன்றி ஆலையை மூடிவிட்டனர். தமிழக அரசு உள்நோக்கத்துடன் ஆலையை மூட அரசாணை பிறப்பித்துள்ளது என்றார்.
அதற்கு வைத்தியநாதன் கூறுகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனை நடத்திய பிறகே ஆலை மூடப்பட்டது என்றார். இதையடுத்து நீதிபதி கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வரும் 18 ஆம் தேதிக்குள் தமிழக அரசுபதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications