ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்.. கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்
புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும், கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாஸ் புயல் ஒடிஸா அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் புயல் மையம் கொண்டிருக்கிறது. தம்ரா துறைமுகத்திற்கு 40 கி.மீ. தொலைவிலும் பாலசோரிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தூரத்திலும் புயல் உள்ளது.
இந்த புயல் இன்று மதியம் கரையை கடக்கிறது. இந்த புயலால் பாரதீப் பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 185 கி.மீ வேகத்திற்கு காற்று வீசும்.

ஒடிஸா
கொரோனா விதிகளுடன் ஒடிஸாவிலிருந்து 7 முதல் 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். ஒடிஸாவின் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம்
மீட்பு பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் தீகா, ஐஎன்எஸ் ராஜாளி ஆகிய இந்திய கடற்படை விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. கொல்கத்தா, வடக்கு 24 பர்கானா, தெற்கு 24 பர்கானா ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கு வங்க வனத்துறை சார்பில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின் தடை
அதுபோல் புயல் பாதிக்கும் இடங்களில் மின் தடை ஏற்பட்டவுடன் அதை சரி செய்ய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். மேற்கு வங்கத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும். மேதினிபூர் பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும்.

கடல் சீற்றம்
அது போல் பங்குரா, ஜார்காம், தெற்கு 24 பர்கானா பகுதிகளில் அதிக கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேதினிபூர் மாவட்டத்தில் புர்பாவில் திகா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
|
கொல்கத்தா
இன்று காலை 6.19 மணி நிலவரப்படி திகா பகுதிகளில் மணிக்கு 88 கி.மீ. வேகத்திலும் கொல்கத்தாவில் மணிக்கு 62 கி.மீ. வேகத்திலும் பிராசர்கஞ்சில் மணிக்கு 68 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். ஒடிஸாவின் பாரதீப் பகுதியில் சூறாவளி காற்றும் கனமழையும் பெய்யும்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications