மும்பை டிராபிக்: ஆட்டோவிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்
மும்பை: மும்பையில், பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி, டிராபிக்கில் சிக்கிக் கொண்டதால், அப்பெண்ணுக்கு ஆட்டோவிலேயே வைத்து அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மும்பை அசால்வா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அக்பரின் மனைவி சீமா. நிறைமாத கர்ப்பிணியான சீமாவுக்கு நேற்று பிரசவ வலி உண்டானதால், கணவரின் ஆட்டோவிலேயே மருத்துவமனைக்கு கிளம்பினார்.
மருத்துவமனைக்கு அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவர்கள் பயணித்த ஆட்டோ டிராபிக்கில் சிக்கியது. இறங்கி நடந்து செல்லவும் இயலாத அளவுக்கு சீமாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் செய்வதறியாது குழம்பி நின்றார் அவரது கணவர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் சீமாவுக்கு ஆட்டோவில் வைத்தே அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் ஒருவழியாக டிராபிக் சரி செய்யப்பட்டவுடன் சீமாவும், குழந்தையும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications