பெங்களூர்: பைக் திருடர்களை விரட்டி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி கொலை
பெங்களூர்: பைக் திருடர்களை பிடிக்க விரட்டி சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்களின் இந்த தாக்குதலில் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் வயிற்றில் கத்திகுத்து விழுந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
பெங்களூரின் புறநகரான, தொட்டபள்ளாப்புரா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர், ஜெகதீஷ் (32). அப்பகுதியில் நடந்த பைக் திருட்டு ஒன்று தொடர்பாக, கிருஷ்ணா மற்றும் மது ஆகிய இரு திருடர்களை பிடிக்க நான்கு கான்ஸ்டபிள்களுடன் இன்று காலை ஜெகதீஷ் ரோந்து சென்றார்.

நெலமங்களா பகுதியிலுள்ள கிராபைட் தொழிற்சாலை அருகே, திருடர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். தப்பியோட முடியாது என அறிந்ததும், திருடர்கள், போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். கத்தியை எடுத்து அதில் ஒருவன் குத்தியதில், ஜெகதீஷ் மார்பில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

வெங்கடேசமூர்த்தி, என்ற கான்ஸ்டபிளுக்கு வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெங்கடேசமூர்த்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications