மயிலாப்பூர் அறிவுஜீவிகளின் பேச்சை கேட்டுத்தான் கருணாநிதியை சந்தித்தார் மோடி.. சாமி பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு- வீடியோ

  டெல்லி : மயிலாப்பூரில் இருக்கும் அறிவுஜீவிகளின் பேச்சைக் கேட்டே பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பு நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி விமர்சித்துள்ளார்.

  2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டதால் மூத்த வழக்கறிஞர் சுப்ரமணிணுயன் சாமி இன்று காலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பிரதமர் மோடி மற்றும் திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

  Subramanian swamy criticises PM Modi Karunanidhi meeting is because of someone's idea from Mylapore

  இதற்கு பதிலளித்த அவர் மயிலாப்பூரில் இருக்கும் அறிவுஜீவிகளின் பேச்சைக் கேட்டே பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதியை சந்தித்துள்ளார். கருணாநிதியை மோடி சந்தித்தாலும் 2ஜி வழக்கில் எந்த தாக்கமும் இருக்காது.

  2ஜி வழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்கள் இருப்பதால் காலஅவகாசம் எடுப்பதில் தவறில்லை. ஒருவேளை இந்த வழக்கில் ஆ.ராசாவிற்கு விலக்கு கிடைத்தால் அடுத்த கட்டமாக இது குறித்து உச்சநீதிமன்றத்தில்ல வழக்கு போடப்படும் என்றும் சுப்ரமணியன் சாமி தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP Senior leader Subramanian swamy criticises PM Narendra Modi and Karunanidhi meeting held due to someones idea from Mylapore.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற