ஜெட்லியை விட சிறந்த நிதி அமைச்சராக என்னால் செயல்பட முடியும்: சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை விட தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாஜக அரசின் கேடயமாக இருப்பவர் என்று சொல்லும் அளவுக்கு மோடியின் நம்பிக்கையை பெற்றவர்களில் ஒருவர் அருண் ஜெட்லி. மத்திய அரசின் நிதி அமைச்சராக பதவி வகித்து வரும் அவர், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசின் மீதான எல்லா விதமான விமர்சனங்களுக்கும் பதில் அளித்து வருகிறார்.

இவருக்கும், கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனை, சுப்பிரமணியன் சுவாமி இடைவிடாமல் விமர்சித்ததற்கு ஜெட்லி மீதான பகையே காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்த பகை நேற்று வெளிப்படையாக வெடித்தது. நிதி அமைச்சர் பதவியில் ஜெட்லியை விட தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
டெல்லியில் 'இந்தியா டுடே' சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது கூறுகையில், 'நான் ஒரு பொருளாதார நிபுணர். அவர் (ஜெட்லி) ஒரு வழக்கறிஞர் அப்படியிருக்கும் போது அவரால் எப்படி என்னை விட சிறப்பாக செயல்பட முடியும்?' என்று கேள்வி எழுப்பினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications