மானியங்கள் கட்... சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம்?
டெல்லி: மானியங்களை படிப்படியாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும், வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மானியங்களால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்தாண்டு அளித்த மத்திய அரசின் மானியங்களுக்கு செலுத்த வேண்டிய பில் பாக்கி மட்டும் ரூ.1 லட்சத்து 15ஆயிரம் கோடிகளாகும். இதை ஈடுகட்ட மானியங்களை குறைக்க மத்தியில் அமைந்துள்ள நரேந்திரமோடி தலைமையிலான புதிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்தகால அரசின் நிர்வாக சீர்கேடுகள் இப்போது பாரமாகியுள்ளதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்யசபாவில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மானிய குறைப்பு நடைமுறைக்கு வர உள்ளது.

பெயர் தெரிவிக்க விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில பொருட்கள் மீதான மானியங்களை குறைக்க பிரதமரை வலியுறுத்த உள்ளோம். இதனால் மானியம் பெறும் பொருட்களின் விலை ஏறும்" என்றார்.
எரிபொருளுக்கு அதிக மானியம் அளிக்கப்படுகிறது. (டெல்லியில்) தற்போது, ஒரு லிட்டர் டீசல் ரூ.57.28க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டாலே, ஆண்டுக்கு ரூ.5ஆயிரம் கோடி மானியம் அரசுக்கு மிச்சமாகும். மானிய விலையில் வீடுகளுக்கு அளிக்கப்படும் சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்தினால், அரசுக்கு ஆண்டுக்கு 3,800 கோடி மிச்சமாகும். யூரியா விலையை டன்னுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தினால், அரசுக்கு 3ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இதுபோன்ற 'மிச்ச' கணக்குகளை நிதித்துறை அமைச்சகம் தீட்டி மோடிக்கு அனுப்பி வைத்துள்ளது.
வீட்டுக்கு அளிக்கும் மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், டீசல் மீதான விலையை, மாதத்துக்கு 50 பைசா என்ற வீதத்தில் உயர்த்த வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளையும் பிரதமருக்கு நிதித்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications