பயமுறுத்தும் இயற்கை: மாலை நேரத்தில் திடீரென இரவு போல இருள் சூழ்ந்தது.. லக்னோ மக்கள் பீதி
லக்னோ: உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் திடீரென மாலை நேரத்தில் இரவு போல இருள் சூழ்ந்ததால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.
உ.பி மாநிலம் லக்னோவில் வழக்கம்போல நவம்பர் மாத குளிர் ஆட்டி வந்தது. பகல் நேரத்தில் சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்தது. ஆனால், இன்று மாலை 4 மணிக்கு மேல் திடீரென நகரை இருள் சூழ்ந்தது. 4.30 மணிக்கெல்லாம், இரவு 9 மணிக்கு நிகராக நகரம் முழுக்க இருள் சூழ்ந்தது. இதனால் நகரவாசிகள் கடுமையான அச்சமடைந்தனர்.
Sudden change of weather in Lucknow. pic.twitter.com/wLV0NXnVIw
— ANI (@ANI_news) December 1, 2015 சாலைகளில் விளக்குகள் எரியவிட்டபடியே வாகனங்கள் பயணித்தன. நேரில் பார்த்தவர்களால் இது மாலை நேரம் என்று உணர முடியாத அளவுக்கு இருள் கவ்வியிருந்தது.
அதேநேரம், திடீரென புழுதி புயலும் வீசத்தொடங்கியது. தூசி, புழுதி கண்களில் விழுந்ததால் வாகனங்களில் சென்றோர், சாலையோர ஷெல்டர்களில் தஞ்சம் அடைந்தனர்.
சென்னையில் வரலாறு காணாத மழை உலுக்கி வரும் நிலையில், லக்னோவில் திடீரென இருள் சூழ்ந்து அச்சம் காட்டியுள்ளது. இயற்கையின் இந்த மாறுபாடுகள் மக்கள் மனதில் பேரச்சத்தை உருவாக்கியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications