இந்தியாவை "வட்டமிடும்" சல்பர் டை ஆக்சைடு பேராபத்து!
டெல்லி: இந்தியாவிற்கு மேலே வளிமண்டலத்தில் சல்பர்டை ஆக்சைடு என்னும் விஷவாயு அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சல்பர் டை ஆக்சைட்.. அபாயகரமான விஷ வாயு. பூமியின் வளிமண்டலத்தில் இது காணப்படுகிறது. இந்த வாயுவானது, சுற்றுச்சூழலைப் பாதிக்கும். நீராவியுடன் சேர்ந்து இது அமில மழையை கொடுக்கிறது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள ஏரோசால் துகள்களுடன் இணைந்தும் இது அபாயகரமான ரசவாதத்தைப் புரிகிறது.
இப்போது விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கு மேலே சல்பர் டை ஆக்சைடின் இருப்பு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேசமயம் சீனாவுக்கு மேலே இது கணிசமாக குறைந்து வருகிறதாம்.

வானிலை மாற்றங்கள்...
சல்பர் டை ஆக்சைடால் பல சுகாதாரக் கேடுகள் மட்டுமல்லாமல் வானிலை மாற்றங்களும் கூட நேரிடும் என்பதால் நிச்சயம் இது நமக்குக் கவலை தரும் விஷயம்தான்.

உற்பத்தி...
எரிமலை வெடிப்பு, தீ, பைட்டோபிளாங்டான் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து சல்பர் டை ஆக்சைட் உற்பத்தியாகிறது. இருப்பினும் சல்பர் அதிகம் அடங்கிய நிலக்கரி, எண்ணெய், பெட்ரோலியம் ஆகியவற்றிலிருந்து இந்த வாயு அதிக அளவில் உற்பத்தியாகிறது.

கவலைக்குரிய விஷயம்...
உலக அளவில் சல்பர் டை ஆக்சைட் உற்பத்தியைக் குறைத்துக் கட்டுப்படுத்த நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளி்ல இறங்கியுள்ளன. உலகின் சில பகுதிகளில் சல்பர் டை ஆக்சைட் அதிக அளவில் உள்ளதாக கூற்படுகிறது. இந்தியாவிலும் இது கவலை தரும் அம்சமாக மாறியுள்ளது.

அதிகரிப்பு...
செயற்கைக்கோள் படங்களைப் பார்த்தால் இது தெரியும். இந்தியாவில் முன்பை விட தற்போது சல்பர் டை ஆக்சைடு உற்பத்தி அதிகரித்துள்ளதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.

ஆரா செயற்கைக்கோள் படங்கள்...
நாசாவின் ஆரா செயற்கைக் கோள் படங்களைப் பார்ததால் இது தெரிய வரும். ஆசிய நாடுகளில்தான் அதிக அளவிலான சல்பர் டை ஆக்சைட் காணப்படுகிறது.

இந்தியாவில்...
இந்தியாவில் கடந்த 2005 முதல் 2014 வரையிலான செயற்கைக் கோள் படங்களைப் பார்த்தால் படிப்படியாக அது அதிகரித்து வருகிறது என்று தெரிய வருகிறது.

சீனாவில் குறைகிறது...
அதேசமயம், சீனாவில் இது படிப்படியாக குறைந்து வருகிறது. கிழக்கு சீனாவில் குறைந்து வரும் அதேசமயத்தில், வடக்கு சீனாவில் இது அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஷாங்காய் நகரைச் சுற்றிலும் யாங்ஸீ ஆற்றுப் படுகையில் இது அதிகமாக இருக்கிறது.

சட்டிஸ்கர், ஒடிஷா...
இந்தியாவில் சட்டிஸ்கர், ஒடிஷா மாநிலங்களுக்கு மேலே சல்பர் டை ஆக்சைடு அதிக அளவில் உள்ளது. இங்கு தொழிற்சாலைகள் அதிகம் என்பது முக்கியமானது.

தாமதமான முயற்சி...
சீனாவில் சல்பர் டை ஆக்சைடு அளவைக் குறைக்கும் முயற்சிகள், கடந்த 2007ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இந்தியாவில் 2011ல்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications