திரித்து எழுதும், பொறுப்பற்றவர்கள்: மீடியாக்களை விளாசிய சசி தரூர்
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு பற்றி வாய் திறக்காமல் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது பெயரை கெடுக்க மீடியாக்கள் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அண்மையில் அறிவித்தனர். இது குறித்து தரூரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது அவர் பதில் அளிக்கவே இல்லை.

இந்நிலையில் அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மீடியாக்கள் அதிலும் குறிப்பாக செய்தி தொலைக்காட்சி சேனல்கள் நான் கூறுவதை மாற்றி தெரிவித்து, எனது பெயரை கெடுக்கின்றன. இது பொறுப்பற்ற செயல். 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் நான் கூறுவதை ஒழுங்காக பதிவு செய்வது இல்லை. இங்கு பேசுவது பற்றி நாளை செய்தித்தாளில் செய்தி வந்தாலும் நிச்சயம் அது என்னைப் பற்றி தவறானதாக தான் எழுதப்பட்டு வரும் என்றார்.
இதற்கிடையே தரூரும், சுனந்தாவும் சண்டை போட்ட ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர்களிடம் டெல்லி போலீசார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications