For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனந்தா மரணம்: தரூரின் 'காலி' போன் பேச்சை டெல்லி போலீஸ் எப்பொழுது வெளியிடும்?- சு.சாமி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது மனைவி மரணம் பற்றி உதவியாளரிடம் போனில் பேசியதை டெல்லி போலீசார் எப்பொழுது வெளியிடுவார்கள் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள லீலா ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மாலை 4.30 மணிக்கு போன் செய்து தரூரிடம் அவரது உதவியாளர் சுனந்தா காலி என்று கூறிய உரையாடலை டெல்லி போலீசார் எப்பொழுது வெளியிடுவார்கள்? என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுனந்தாவின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை கோரி பொதுநல வழக்கு தொடரப் போவதாக சாமி தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னதான் சுனந்தாவின் கணவர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்து சென்றாலும் நான் பொதுநல வழக்கு தொடருவேன் என்றார்.

சுனந்தாவின் மரணம் தற்கொலையா, கொலையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP leader Swamy tweeted that,'When will Delhi Police release the telephone transcript of Tharoor's Secy informing him at 4.30 pm of Sunanda being "terminated"? Why imp?'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X