சுனந்தா மரணத்திற்குக் காரணம் விஷம் - காரணத்தைக் கண்டறிய போலீஸுக்கு உத்தரவு
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்திற்குக் காரணம் விஷம் என்று இந்த வழக்கை விசாரித்து வந்த துணைக் கோட்டாட்சியர் அலோக் சர்மா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தைக் கண்டறியுமாறும், இந்த வழக்கை கொலை அல்லது தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்குமாறும் காவல்துறைக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை துணைக் கோட்டாட்சியர் அலோக் சர்மாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் மரணம் சம்பவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் உடலில் 12க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, உயிரிழப்புக்கு முன்பு சுனந்தா போராடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய அலோக் சர்மா தனது பரிந்துரை அறிக்கையை காவல்துறையிடம் தற்போது சமர்ப்பித்துள்ளார். விஷமே சுனந்தாவின் மரணத்திற்குக் காரணம் என்றும், இது எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டறியுமாறும், இந்த வழக்கை கொலை அல்லது தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்குமாறும் அவர் காவல்துறைக்குப் பரிந்துரைத்துள்ளார்.
சசி தரூர் அப்பாவி-போலீஸ்
இந்த நிலையில் சுனந்தா மரண வழக்கில் அவரது கணவரான மத்திய அமைச்சர் சசி தரூருக்குத் தொடர்பு இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனந்தா மரணமடைவதற்கு 2 மணி நேரத்திற்கு அவரை நேரில் பார்த்த ஒரு சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் இந்த முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாம்.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக டெல்லி காவல்துறையை கட்டுப்படுத்தி வரும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதாவது உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு சசி தரூர் கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications