ஆ ஆ.... நிபந்தனையில்லாத ஆதரவெல்லாம் கிடையாது -காங்.
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் தரவில்லை என்று அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லி மூத்த காங்கிரஸ் தலைவர் கிரண் வாலியா கூறுகையில், ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் என்று நாங்கள் கூறியுள்ளோம். அதேசமயம், எப்போதும் அவர்கள் செய்யும் அனைத்தையுமே ஆதரிப்போம் என்று அர்த்தம் அல்ல. அவர்கள் சரியாக செயல்படாவிட்டால் எங்களது ஆதரவை மறு பரிசீலனை செய்வோம்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் தருவதாக செய்திகள் வெளியாகின. கட்சியின் டெல்லி பொறுப்பாளரான ஷகீல் அகமதுவும் அப்படித்தான் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இருப்பினும் தற்போது நிபந்தனையற்ற ஆதரவு அல்ல இது என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லிசட்டசபைக்கு நடந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்குகிறது. அக்கட்சிக்கு 32 உறுப்பினர்கள் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. 8 சீட்டுகளுடன் 3வது இடத்தைப் பிடித்தது காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications