ஆயுள் கைதிகள் விடுதலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா? .. மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி : ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு, மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

அப்போது குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை நிராகரித்த பின், அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.
தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அதிகாரம் உள்ள போது மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா என்றும் நீதிபதிகள் வினவினர்.
இதற்கு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து ஒப்புதல் பெற்ற பிறகே மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்றும் சில சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ரஞ்சித் குமார் தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்ந்து மத்திய அரசு தனது வாதத்தை நடத்தி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications