காவிரி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதி தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

cauvery

அதில் தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்காக காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 65 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, மதன் பி.லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வைத்தியநாதன் மற்றும் பாலி நாரிமன் ஆகியோர் இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது காவிரி வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு முக்கியமான வேறு சில வழக்குகளை அவசர அடிப்படையில் விசாரிக்க வேண்டியிருப்பதால் காவிரி தொடர்பான நிலுவை வழக்குகளை அவசர அடிப்படையில் விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கை மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+