உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடுவேயான பிரச்சினை முடிவுக்கு வந்தது: பார் கவுன்சில் அறிவிப்பு
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும், வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, கடந்த வெள்ளிக்கிழமை செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகிய 4 சீனியர் நீதிபதிகள் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிபதிகள் இவ்வாறு நிருபர்களை சந்தித்து பேட்டியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பார் கவுன்சில் தலைவர் பேட்டி
கடந்த சில தினங்களாக இப்பிரச்சினை தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியது. டிவி சேனல்களில் இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதுபற்றி அறிக்கை மூலம் விளக்கம் அளிப்பார் என சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதுபோல எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், டெல்லியில், இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா.

நீதிபதிகளுடன் ஆலோசனை
நீதித்துறையில் நிகழ்ந்த இந்த நிகழ்வுகளையடுத்து, இந்திய பார் கவுன்சில் இதில் தலையிட்டது. நாங்கள் சுமார் 15 மூத்த நீதிபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். எல்லோருமே, தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகள் நடுவேயான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் தங்களுக்குள்ளாகவே பேசி இந்த விவகாரத்தை சரி செய்து கொண்டனர்.

அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்
இந்த நிகழ்வில் இருந்து அரசியல் ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இது உள் விவகாரம். அதுவும் இப்போது சரியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் மாண்பு மதிக்கப்பட வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் அனைத்து வகை நடவடிக்கையையும் எடுத்துள்ளோம்.

நடவடிக்கை தேவையில்லை
நான்கு நீதிபதிகளுமே, வழக்கு விசாரணை பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. நான்கு நீதிபதிகளுமே, நேர்மையானவர்கள் என்பதை அறிந்துள்ளோம். சிலர் தங்களது தனிப்பட்ட விஷயங்களை புகுத்த பார்த்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாமதமாக ஆரம்பித்த விசாரணை
உச்சநீதிமன்றம் இன்று காலை 9 நிமிடங்கள் தாமதமாக, காலை 10.39 மணிக்கு அலுவலை தொடங்கியது. நீதிபதிகள் தங்களுக்குள் இந்த விவகாரம் குறித்து அந்த நேரத்தில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பார் கவுன்சில் தலைவர் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications