நேதாஜி ஆவணங்களை வெளியிடும் விவகாரம்... மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.
இது தொடர்பாக ஸ்நேகாசிஸ் முகர்ஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். நேதாஜி பற்றிய 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசும் அதைப் பின்பற்றி நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.கோயல் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவல முதன்மை செயலாளரை மனுதாரர் அணுகலாம் என்றும், அவர்கள் பதில் அளிக்கும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும். அல்லது டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மத்தியில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசுகள் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. இந்த ஆவணங்கள் வெளியிடாதது, மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என்று மனுதாரர் முகர்ஜி குற்றம் சாட்டினார். இதற்கு நீதிபதிகள், எல்லா இடத்துக்கும் அடிப்படை உரிமைகளை கொண்டு வரக் கூடாது என்று கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications