வன்முறையை கட்டுப்படுத்த முடியாதது ஏன்.. கர்நாடகா, தமிழகத்திற்கு சுப்ரீம்கோர்ட் குட்டு #cauvery

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களாலும் ஏன் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சுப்ரீம்கோர்ட் வியப்பு வெளிப்படுத்தியுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வரும் 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கடந்த 12ஆம் தேதி கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்ய அந்த மீது உத்தரவு ஒன்றை பிறப்பித்த உச்சநீதிமன்றம் 20ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையொட்டி பெரும் கலவரங்கள் வெடித்தன.

Supreme court sought to know why both the KA and TN unable to control the situation

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலம் முழுவதும், போராட்டங்களும், வன்முறை கலவரங்களும் நிலவின. இதில் தனியாருக்கு சொந்தமான பேருந்துகளும் எரிக்கப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிக்கப்பட்டன.

இந்த வன்முறைகள் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு சிவக்குமார் என்பவர் சார்பாக மூத்த வக்கீல் ஆதிஷ் அகர்வால், வக்கீல் என்.ராஜாராமன் ஆகியோர் நேற்று ஆஜராகி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

இரு மாநிலங்களிலும் கலவரத்தைத் தூண்டும் சிலரின் செயல்களால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை அவசர வழக்காக ஏற்று உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் அமர்வு முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றங்களின் தீர்ப்பு அல்லது உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என குறிப்பிட்டநர். மேலும், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ஏன் மாநில அரசுகள் அந்த கலவரங்களை தடுக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

வரும் 20ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது கோர்ட்டுக்கு பதில் சொல்ல இரு மாநிலங்களும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். வரும் 20ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்த வழக்கு விசாரணை மீண்டும் வர உள்ளது. அப்போது தண்ணீர் பிரச்சினையோடு சேர்த்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையையும் நீதிபதிகள் எழுப்புவார்கள் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+