தமிழக கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தீர்ப்பு வழங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 வருடங்கள் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே தமிழில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும் என கோர்ட்டால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை பிறகு விரிவாக விசாரிப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
"ஜெர்மனி, ஜப்பான், சீனா என உலகின் அனைத்து நாடுகளிலும் நீதிமன்றங்களில் அந்தந்த நாடுகளில் தாய் மொழிகளில்தான் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் தான் தீர்ப்பை எழுத வேண்டியுள்ளது" என சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், சென்னை ஹைகோர்ட் நீதிபதி அரிபரந்தாமன் ஆதங்கம் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications