ஜெயலலிதா ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை தான் விசாரணை- உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அவசர வழக்காக கருத முடியாது என்று கூறிவிட்ட உச்சநீதிமன்றம், வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமை மனு மீது விசாரணை நடத்துவதாக அறிவித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளி என்று அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 7ம் தேதி கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவரை ஜாமீனில் விட முகாந்திரம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி சந்திரசேகரா தள்ளுபடி செய்தார். இதையடுத்து கடந்த 9ம்தேதி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் பரிசீலனைக்கு இன்று வந்தது. ஹைகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகியும், ஜாமீன் கிடைக்காததால் வெறுப்பிலுள்ள ஜெயலலிதா தரப்பு, தற்போது மற்றொரு மூத்த வக்கீல் பாலி நாரிமனை ஜெயலலிதாவுக்காக வாதிட ஏற்பாடு செய்துள்ளது.
இன்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் முன்பாக பாலி நாரிமன் ஆஜராகி, தனது கட்சிக்காரரின் மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வேறு எந்த மாதிரியான வாதத்தையும் அவர் முன்னெடுக்கவில்லை.
அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வக்கீல்களும் தங்கள் கட்சிக்காரர்கள் மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பெஞ்சில் உள்ள மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி தத்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, இந்த வழக்கை அவசர வழக்காக கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்துவதாக கூறி உத்தரவிட்டார். இதனால் ஜெயலலிதா தரப்பில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை எந்த நீதிபதியின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்பது, வியாழக்கிழமை, கோர்ட்டில் வழக்கை பட்டியலிடும்போதுதான் தெரியவரும். வெள்ளிக்கிழமைக்கு பிறகு உச்சநீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறை விடப்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமை வாத, விவாதம் நீண்ட நேரம் நடைபெற்று அன்று முடிவெடுக்க முடியாமல் போனால், விசாரணை தீபாவளிக்கு பிறகு தொடரும் வாய்ப்புள்ளது.
இதனிடையே, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், தீர்ப்புக்கு இடைக்கால தடை வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனு கர்நாடக ஹைகோர்ட்டில் வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஜெயலலிதாவுக்காக ஆஜராகும் பாலி நரிமன், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்துக்கு ஆதரவாக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications