ஆச்சர்யம், ஆனால் உண்மை: வேலைக்காரருக்கு ரூ.600 கோடி சொத்தை உயில் எழுதிய காங். தலைவர்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

கொடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொட்டும் எனக் கூறுவார்களே, அதற்கு உதாரணமாக குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்காட்டில் வசித்து வந்தவர் கஜ்ராஜ் சிங் சடேஜா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரது வீட்டில் வேலை செய்து வந்தவர் வினுபாய் கஞ்சிபாய்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார் கஜ்ராஜ் சிங். இவர் தனது மரணத்திற்கு முன்னர் தனது விசுவாசியான வினுபாய் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, பணம் உள்ளிட்ட சொத்தை எழுதி வைத்துள்ளார்.

சமீபத்தில் வினுபாயை அவரது குடும்பத்தாருடன் கடத்தியுள்ளனர் கஜ்ராஜின் உறவினர்கள். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் அவர்களை போலீசார் மீட்டனர். அதனைத் தொடர்ந்து கடத்தலின் பிண்ணனி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கஜ்ராஜ் தனது உயிலில் தனது உறவினர்களைப் புறக்கணித்து, வினுபாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்தது தெரிய வந்துள்ளது.

கஜ்ராஜ் அளித்துள்ள பணத்தின் மூலம், எதிர்காலத்தில் தனது குழந்தைகளைக் கல்வி கற்க இங்கிலாந்து அனுப்ப திட்டமிட்டுள்ளாராம் வினுபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+