குஜராத் சென்று வந்த பிறகு கெஜ்ரிவாலின் புகழ் மங்கிவிட்டதாம்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்று வந்த பிறகு அவரது புகழ் மங்கியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் குஜராத்தில் கடந்த வாரம் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குஜராத்தில் கால் வைத்த முதல் நாளே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அவர் குஜராத் சென்ற நேரத்தில் ட்விட்டரில் வந்த கருத்துக்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை ஒஹாயோ சென்டர் ஆப் எக்சலென்ஸ் இன் நாலேட்ஜ் எனேபிள்ட் கம்ப்யூட்டிங்கில் ஆய்வாளராக இருக்கும் ஷ்ரேயான்ஷ் பட் வெளியிட்டுள்ளார்.

புகழ்
கெஜ்ரிவால் குஜராத் சென்றபோது அவருடைய மற்றும் கட்சியின் புகழ் வெகுவாகக் குறைந்ததையே இந்த படம் காட்டுகிறது.

ஆம் ஆத்மி
கெஜ்ரிவால் குஜராத் சென்றபோது அம்மாநிலத்தில் அக்கட்சி மீதான வெறுப்பு 84 சதவீதம் அதிகரித்துள்ளது. கட்சிக்கான ஆதரவு 17 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

அகமதாபாத்
கெஜ்ரிவால் குஜராத்தில் தனக்கு கருப்புக் கொடி காட்டியதையும் தாண்டி அகமதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

கெஜ்ரிவால்
குஜராத்தை முன்னேற்றிவிட்டேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஊர், ஊராக கூறுவது சுத்தப் பொய் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி நகர்
குஜராத் முன்னேற்றம் குறித்து கேள்வி கேட்க சென்ற கெஜ்ரிவாலை சந்திக்க மோடி மறுத்துவிட்டார். போலீசார் கெஜ்ரிவாலை மோடியின் வீடு இருக்கும் காந்தி நகருக்குள்ளேயே நுழைய அனுமதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications