இலங்கையின் நண்பரான சுஷ்மா மீனவர்களுக்காக போராடுவது தேர்தல் நாடகமே...: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டத்தை ராமேசுவரத்தில் நடத்தியது பாரதீய ஜனதாக் கட்சி. இப்போராட்டத்திற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை ஏற்றிருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் இப்போராட்டம் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:-
இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை பற்றி சுஷ்மா சுவராஜுக்கு நன்றாகவே தெரியும். அவர் இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதபோதும் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்று வந்தவர்.
அந்த அளவுக்கு இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். இப்போது தமிழக மீனவர்களுக்கு உதவுவது போல் தேர்தலுக்காக அவர் ஆடும் நாடகம்தான் இந்த போராட்டம். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
துறைமுக பகுதிகள் தவிர இதர பகுதிகளில் மீன்பிடிக்க ஒப்பந்தம் பேசி இருக்கிறார்கள். அதுவரை இருநாட்டு அமைச்சர்களோ, அதிகாரிகளோ இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை. இந்த பிரச்சனைக்கு விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும். ஆனால் அதை உடைக்க சிலர் முயலுகிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications