லலித் மோடி பற்றி எந்த விவாதத்திற்கும் தயார்- சுஷ்மா ஸ்வராஜ்.. பதவி விலகினால் தான் எல்லாம்- காங்கிரஸ்
டெல்லி : லலித் மோடி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கியுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்கத் தயார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் முறைகேட்டில் தொடர்புடைய லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளியால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மாநிலங்களை முடங்கியது.

அடுத்து வரும் நாட்களிலும் இப்பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் தயார் என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது..
"நான் இன்றே எந்த விவாதத்திற்கும் தயாராக இருந்தேன். இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவிக்குமாறு அருண் ஜெட்லியிடம் கூறினேன். அருண் ஜெட்லியும் இதனை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்." என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "முதலில் சுஷ்மா சுவராஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதன்பின்னர்தான் விவாதம், மசோதா தாக்கல் எல்லாம் நடைபெறும்" என கூறியுள்ளார்.
இதனால் மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் காணப்படும் என்றே கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications