ஐஎஸ் ஆதரவாளரான மேற்கு வங்கத்தை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளரான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தனியாக்ஹாலியை சேர்ந்தவர் ஆசிக் அகமது என்கிற ராஜா(19). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் ராஜாவை பிடித்து கொல்கத்தாவில் வைத்து 5 நாட்கள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அவரது வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ராஜாவை அடுத்த கட்ட விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து வந்தனர். டெல்லியில் வைத்து ராஜா புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேரை இதுவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications