60,000 பேருக்கு பிரியாணி.. மே.வங்கத்தில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ.. சவுதி மதகுரு பங்கேற்பு - பதற்றம்
கொல்கத்தா: அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை போல் மேற்கு வங்க மாநிலம் முர்சிடாபாத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என்று அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயூன் கபீரை, மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் கூட அந்த எம்எல்ஏ பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று புதிய பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த 2 இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். ரூ.30 லட்சம் செலவில் 60 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. தற்போது அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கிறார். தமிழகத்தை போல் அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான ஹூமாயூன் கபீர் சர்ச்சையை கிளப்பினார். மேற்கு வங்க மாநிலத்தில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி போல் புதிய பாபர் மசூதி கட்டப்படும் என்று கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தை எடுத்து கொண்டால் முர்சிடாபாத் என்பது மிகவும் சென்சிட்டவான இடமாகும். அங்கு தான் பாபர் மசூதி ஸ்டைலில் புதிய மசூதி கட்டப்படும் என்று எம்எல்ஏ ஹூமாயூன் கபீர் கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. ஏனென்றால் முர்சிடாபாத்தில் உள்ள மக்கள்தொகையில் 67 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இங்கு பெரியளவில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து இந்த கருத்து ஹூமாயூன் கபீரின் சொந்த கருத்து. அதற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தது. அதோடு ஹூமாயூன் கபீரை கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அறிவித்தது. இருப்பினும் எம்எல்ஏ ஹூமாயூன் கபீர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று அவர் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டினார். செங்கல் கொண்டு வந்து அவர் அடிக்கல் நாட்டினார். அதேபோல் ஏராளமானவர்கள் தலையில் செங்கல் சுமந்து வந்தனர்.
முதலில் குரான் வாசிக்கப்பட்டது. அதன்பிறகு அடிக்கல் நாட்டப்பட்டது. ‛அல்லாகு அக்பர்' மற்றும் ‛நாரா இ தக்பீர்' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவில் இருந்து வந்த 2 மதகுருக்கள் உள்பட பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். கூட்டம் அலைமோதியதால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை 12ல் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் 7 கேட்டரிங் ஏஜென்சி சார்பில் பிரியாணி சமைத்து 40,000 விருந்தினர்கள், அந்த பகுதியில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. உணவுக்கு மட்டுமே மொத்தம் ரூ.30 லட்சம் வரை செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன்றைய விழாவுக்கான மொத்த செலவு ரூ.70 லட்சத்தை தொட்டு இருக்கும் என்று எம்எல்ஏ ஹூயூமான் கபீருக்கு நெருக்கமானவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications