"ஓம் க்ரீம்".. ராத்திரி பூஜை ஜெய்யும் "சுதா"...சக கைதிகள் பீதி... வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை!
சிறையில் சுதாகரன் மந்திரவாதியைப் போல் இரவு நீண்ட நேரம் வரை மந்திரங்களை ஓதி பூஜை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் இரவு நேரங்களில் உடல் முழுவதும் திருநீரை பூசிக்கொண்டு மந்திரங்களை ஓதுவதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்துள்ள சக கைதிகள் தங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இதையடுத்து கடந்த 16ஆம் 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவும் இளவரசியும் ஒன்றாக சரணடைந்த நிலையில் சுதாகரன் தனியாகவும் தாமதமாகவும் வந்து சரணடைந்தார்.

சுதாகரனுக்கு சலுகைகள் மறுப்பு
அவர்களில் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் சிறை அறையில் பல்வேறு சலுகையில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சுதாகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இரவு நேரங்களில் மந்திரங்களை ஓதி பூஜை
இந்நிலையில் சிறையில் உள்ள சுதாகரன் எப்போதும் உடல் முழுவதும் திருநீரை பூசிக் கொண்டு வலம் வருவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் நீண்ட நேரம் சிறை அறையில் மந்திரங்களை ஓதி அவர் பூஜை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதாகரனை கண்டு அஞ்சும் சக கைதிகள்
இதனால் சக கைதிகள் இரவு நேரங்களில் தூங்க முடியவீல்லை புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. சுதாகரனிடம் பேசவும் கைதிகள் பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை
மந்திரவாதியைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர் பூஜை செய்வதால் அவரைப் பார்த்து சக கைதிகள் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால் சுதாகரனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என சக கைதிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications