தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது: பாஜக தலைவர் கருத்தால் வலுக்கும் சர்ச்சை
ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு அரசியல்வாதி, தாஜ்மஹால், இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு கறை என்றும், அதை துரோகிகள் கட்டினர் எனவும் கூறியுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சங்கீத் சோம், மீரட் நகரில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
உத்தர பிரதேசத்தின் சுற்றுலா தலங்கள் குறித்த கையேடுகளில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்ட பின்பு வருகின்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும், இணையத்தில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திங்களன்று, தாஜ்மஹால் என்ற வார்த்தையே இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.
பட்டியலில் இருந்து, தாஜ்மஹாலின் பெயர் நீக்கப்பட்டது பலருக்கு மனவேதனை அளித்துள்ளது என்று ஞாயிறன்று சோம் பேசினார்.
தாஜ்மஹாலை கட்டியவர், தனது தந்தையையே சிறையில் அடைத்தார் என்பது தான் வரலாறா?
உத்தர பிரதேசம் மற்றும் ஹிந்துஸ்தாலின் இருந்த பல இந்துக்கள், தாஜ்மஹாலை கட்டியவரின் இலக்காக இருந்தார்கள் என்பது தான் வரலாறா?
இது தான் வரலாறு என்றால், அது மிகவும் துரதிருஷ்டவசமானது, அதை நாம் மாற்றுவோம் என நான் உறுதியளிக்கிறேன்.
1643 ஆம் ஆண்டு, தனக்கு மிகவும் விருப்பமான மனைவியின் நினைவாக தாஜமஹாலை கட்டிய ஷா ஜகான் என்னும் முகலாய அரசர், தனது தந்தையை சிறையில் வைக்கவில்லை. அவரின் மகன் ஔரங்கசிப்தான் அவரை சாகும்வரை சிறையில் வைத்தார்.
வரலாறு அழிக்கப்படாது
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய வரலாறு சோமிற்கு உள்ளது. 2013ஆம் ஆண்டு, முசாஃபர்நகரில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தில், 62 பேர் கொல்லப்பட்டனர். அதில், பதற்றத்தை தூண்டியதாக அவர் இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாஜகவின் செய்தி தொடர்பாளர் நலின் கோலி, சங்கீத் சோமின் கருத்துக்களில் இருந்து கட்சியை விலக்கிகொண்டுள்ளார்.
அது அவரின் தனிப்பட்ட பார்வை என்று அவர் என்.டி.டி.வியிடம் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் என்ன நடந்ததோ அதை அழிக்கவே முடியாது. ஆனால், அவற்றை இன்னும் சிறப்பாக எழுத முடியும்.
சமூக வலைதளங்களில், தாஜ்மஹாலிற்கு ஆதரவாக பலர் பேசியுள்ளனர்.
2.8 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட, ஊடகவியலாளரான விக்ரம் சந்திரா, யார் ஒருவர் தாஜ்மஹாலை, கலாசாரத்தின் கறை என்று கூறுகிறார்களோ, அவர்கள் மிக தெளிவாக தனது சுயபுத்தியை இழந்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, சிலர் சோமிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
தாஜ்மஹால், சர்ச்சைக்குறிய சின்னமாக சில இந்துக்களுக்கு உள்ளது.
உத்தர பிரதேச முதல்வரும், இந்து தேசியவாதியுமான யோகி ஆதித்யநாத் , கடந்த ஜூன் மாதம், தாஜ்மஹால், இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தவில்லை என்றார்.
பிற செய்திகள்
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை













Click it and Unblock the Notifications