தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்தீராக மாற்றப்படும்.. பாஜக எம்பியின் பேச்சால் சர்ச்சை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்தீர் என மாற்றப்படும் என பாஜக எம்பி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ் மகோட்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா ராம லீலாவுடன் தொடங்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக ஆக்ராவில், 10 நாட்கள் நீண்ட தாஜ் மகோட்சவம் நடத்தப்படுகிறது. இதில் முகலாய கால கலை, கலாச்சார வழக்கான நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக ராமாயணத்தின் அடிப்படையில் ராம் லீலாவில் நடன நாடகத்துடன் தொடங்கப்படுகிறது.

முதல்வர் பங்கேற்பு

முதல்வர் பங்கேற்பு

இந்த விழா பிப்ரவரி 18ந் தேதி தொடங்கி பிப்ரவரி 27ந் தேதி முடிவடைகிறது. இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ராம் நாய்க் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

உள்நோக்கம் கொண்டது

உள்நோக்கம் கொண்டது

இதற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தாஜ் மஹாலில் மகோட்சவம் நடத்துவது உள்நோக்கம் கொண்டது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் தேஜ் மந்தீர்

விரைவில் தேஜ் மந்தீர்

இந்நிலையில் பாஜக எம்பி வினய் கதியார் கூறும் போது தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்தீர் ஆகும் என கூறி உள்ளார். தாஜ் மகோட்சவ் அல்லது தேஜோ மாகோட்ச என்று இரண்டும் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

எம்பி பேச்சால் சர்ச்சை

எம்பி பேச்சால் சர்ச்சை

தாஜ் மற்றும் தேஜ் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்ற அவர் எங்கள் தேஜ மந்திர் அவுரங்கசீப்பின் சமாதியாக மாற்றப்பட்டு உள்ளது. தாஜ் மஹால் தேஜ் மந்திராக விரைவில் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP MP Vinay Katiyar has said that Taj Mahal will be Tej Mandir soon. He has said that 'Taj Mahostav' being held in Agra, Taj Mahotsav or Tej Mahotsav both are the same things. There is not much difference between Taj and Tej BJP MP said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற