யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு எங்களுக்கு ஓட்டு போடுங்க: கெஜ்ரிவால் பலே பிரச்சாரம்
அமேதி: யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட ராணிகஞ்சில் உள்ள சுக்லா பஜாரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

பணம்
தேர்தல் வருகிறது. அவர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணம் அது. அவர்கள் 2ஜி மற்றும் காமன்வெல்த் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணம்.

சேலை
அவர்கள் சேலைகள் மற்றும் போர்வைகள் ஆகியவை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். எங்களுக்கு வாக்களியுங்கள். அதிசயத்திற்கு வாக்களியுங்கள்.

பாஜக
பாஜகவும், காங்கிரஸும் கைக்கோர்த்து செயல்படுகின்றன. பாஜக என்னையும், காங்கிரஸ் அமேதி தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான குமார் விஷ்வாஸையும் தாக்கியது எப்படி? காங்கிரஸ் மோடியையோ அல்லது பாஜகவையோ தாக்கியதாக அல்லது காந்தி குடும்பத்தை மக்கள் தாக்கியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்.

ராகுல்
தேர்தல் முடிந்த பிறகு ராகுல் காந்தி இந்த தொகுதிக்கு திரும்பி வர மாட்டார். பாஜக வேட்பாளரான ஸ்மிரிதி இரானி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கப் போய்விடுவார் என்றார் கெஜ்ரிவால்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications