• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமஸ்கிருதத்தைவிட பழமையான, அழகான மொழி தமிழ்.. சொல்வது மோடி!

By Veera Kumar
|
    தமிழ்தான் பழமையான மொழி, ஒப்புக்கொண்ட மோடி- வீடியோ

    டெல்லி: சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் பழமையான மொழி என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    டெல்லியில் பள்ளி மாணவர்களுடனான 'பரிக்ஷா பே சர்ச்சா' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி இவ்வாறு பேசினார். மோடி மேலும் கூறுகையில், உங்களில் சில மாணவர்களுடன் உங்கள் தாய் மொழியில் உரையாட முடியாததற்கு வருந்துகிறேன். நாம் பல மொழிகளை கற்க வேண்டும்.

    Tamil is one of the oldest languages even older than Sanskrit: PM Modi

    பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழ்தான் மிகவும் பழமையான மொழி. சமஸ்கிருதத்தைவிடவும் தமிழ் பழமையான மொழி. அழகானதும் கூட. ஆனால் என்னால் வணக்கம் என்ற ஒரு தமிழ் வார்த்தையை மட்டுமே பேச முடிகிறது. தமிழ் கற்க முடியாததற்கு நான் வருத்தப்படுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்ச வேண்டாம். நான் கூட அடுத்த வருடம் தேர்தல் என்ற பெயரில் தேர்வு எழுதப்போகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

    இதனிடையே தமிழ்தான் பழமையான மொழி என மோடி கூறியதற்கு வட இந்தியர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கடுப்பு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    கன்னட நெட்டிசன் ஒருவர் சமஸ்கிருதம்தான் பழமையான மொழி, அதற்கு பிறகு கன்னடம்தான் பழமையான மொழி என சிரிக்காமல் சீரியசாக டிவிட் செய்துள்ளார்.

    தமிழ் நெட்டிசன்கள் இதை வரவேற்று, அதற்கான ஆதாரங்களை டிவிட் செய்து வருகிறார்கள்.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Not many know that Tamil is one of the oldest languages even older than Sanskrit, and it has so much beauty in itself: PM Modi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more