நீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக ட்ரான்ஸ்லேட்டர்கள்தான் காரணம்.. மத்திய அமைச்சர்
நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது.
Recommended Video

டெல்லி: நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
வினாத்தாள் குளறுபடியில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக கூறி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வினாத்தாள் குளறுபடி
இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் தமிழில் எழுதிய அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடவும், அதுவரை கவுன்சலிங் நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஎஸ்இ மேல்முறையீடு
இதைத்தொடர்ந்து நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வினாத்தாள் குளறுபடியில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தகவல்
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதில் தமிழ் நீட் வினாத்தாள் விவகாரத்தில் தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பாளர்களே காரணம் என தெவித்துள்ளார்.

தமிழில் மொழி பெயர்த்தனர்
தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

குழப்பம் ஏற்படும்
554 மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கினால் மொத்தம் 750 மதிப்பெண்கள் ஆகிவிடும். நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்ணே 720 தான் என்றும் இதனால் குழப்பம் ஏற்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications