தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு பட்டாசுடன் சென்ற லாரியில் திடீர் தீ- 3 மணிநேரம் வெடித்து சிதறின!
உன்னாவ்: தமிழ்நாட்டில் இருந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக பட்டாசுகளை ஏற்றி சென்ற லாரி நடுவழியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் லாரியில் இருந்த பட்டாசுகள் 3 மணிநேரம் வெடித்து சிதறின. பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்வுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்வைத்து ஏராளமான சர்ச்சைகளும் வெடித்திருக்கின்றன. ராமர் கோவிலையே கட்டி முடிக்காமல் திறக்கிறார்கள் என்பது ஒரு சர்ச்சை. லோக்சபா தேர்தலுக்காக அரசியல் செய்கிறது பாஜக என்பது மற்றொரு சர்ச்சை.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பெரும்பாலான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட "இந்தியா" கூட்டணிகளில் பல வெளிப்படையாகவே பாஜகவின் அரசியலை விமர்சனம் செய்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை எனவும் அறிவித்துள்ளன. சங்கராச்சாரியார்களோ, சனாதன தர்மத்தை முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
#राम #मंदिर की #प्राण #प्रतिष्ठा के वक्त आतिशबाजी होगी.. उसके लिए पटाखों से भरा ट्रक #अयोध्या जा रहा था!#उन्नाव के पास टिक में आग 🔥 लग गई, सारा ट्रक चलकर ख़ाक हो गया!!#कोहरे में भी दूर दूर तक आतिशबाजी देखी गई!!#AyodhyaSriRamTemple #RamMandirPranPratishta pic.twitter.com/ZiQqaMnUuI
— PRIYA RANA (@priyarana3101) January 17, 2024
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாடு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். தமிழ்நாட்டின் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு பட்டாசுகளை ஏற்றி சென்ற லாரி நேற்று இரவு உன்னாவ் மாவட்டம் கார்கி கேடா என்ற கிராமத்தின் வழியாக சென்ற போது திடீரென தீ பிடித்து எரிந்தது. அப்போது லாரியில் இருந்த பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்து சிதறின. இதனால் அந்த லாரி 3 மணிநேரமாக கொழுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். 3 மணிநேரத்துக்கும் மேலாக பற்றி எரிந்த தீ ஒருவழியாக போராடி அணைக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications