தமிழிசை போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்: ஜே.பி.நட்டா
டெல்லி: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சரும், தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என மும்முரமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் கூட்டணி விஷயத்தில் தீவிரம் காட்டி வந்தது.

தேமுதிக பாஜக கூட்டணியில் இணையும் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து வருகிற சட்டபேரவைத் தேர்தலை சந்திக்கும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்களின் பட்டியலுடன் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லி சென்றனர்.
டெல்லியில் நேற்று பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்காக ஏழு, எட்டு பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து, தமிழிசை போட்டியிடும் தொகுதியை விரைவில் அறிவிப்போம்' என்றார்
தமிழகத்தில் பாரதிய ஜனதாவுடன் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications