தமிழகத் தேர்தலுக்கு ரெடியாகுங்க.. பாஜகவினருக்கு அமீத் ஷா "ஆர்டர்"
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்குமாறு தமிழக பாஜக தலைவர்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் நிவாரணப்பணிகள், 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன், தேசியச் செயலர் எச்.ராஜா,மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மோகன் ராஜுலு, கேசவ ராஜன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் ,பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண உதவிகள் வழங்கும் நடைமுறைகள் குறித்தும் அமித்ஷா நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகத்துக்கு எந்த தலைவர்கள், எப்போது வந்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளுடனான உறவு குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து வரைவு திட்டம் தயார் செய்து விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
பாஜக கொள்கையின் படி, ஒவ்வொரு தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி தமிழகத்தில், மாவட்ட, ஒன்றிய அளவிலான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்ததும் மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெறும் என்றார்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications