Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ.வுக்கு பாரதரத்னா விருது வழங்குங்க.. மோடியைச் சந்தித்து முதல்வர் கோரிக்கை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி- வீடியோ

    சென்னை: டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் சென்று கொண்டு இருக்கிறது தமிழக அரசியல். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தற்போது தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

    Tamilnadu CM Palanisamy will meet PM Modi today

    மழையை காரணம் காட்டி இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிடிவி தினகரனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற வருடம் சந்தித்த நிகழ்வு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    [மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சேலத்தில் ராணுவ தளவாட ஆலை.. மோடியிடம் எடப்பாடி வலியுறுத்தியது என்ன?]

    இரண்டு நாட்களுக்கு முன்புதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்று கூறப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து உள்ளார். பல முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வர் பழனிச்சாமி, மோடியிடம் பேசி உள்ளார்.

    இன்று காலை 10.30 மணி அளவில் முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழக மழை பாதிப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து அவர் இதில் பேசியுள்ளார்.

    மேலும் இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சினிமாவில் மற்றும் அரசியலில் ஜெயலலிதாவின் சாதனையை பாராட்டி இந்த விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் கூறினார். மேலும் அறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மை நிதியை விரைந்து வழங்கவும் முதல்வர் இதில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர் ஜெயக்குமார், எம்பி தம்பிதுரை உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+