ஓட்டுபோடுவதற்காக தமிழர்களை பஸ் வைத்து அழைத்து சென்ற கட்சிகள்.. பெங்களூர் நகரம் வெறிச்
பெங்களூர்: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பெங்களூரில் வசிக்கும், மக்கள் பலரும் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர். இதனால், காய்கறி வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது பெங்களூர் நகரம்.
வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெருவாரியான மக்கள் அண்டை மாநிலமான, பெங்களூரில் காய்கறி கடை, தள்ளு வண்டி காய்கறி வியாபாரம், கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். ஆட்டோ டிரைவர்களிலும் கணிசமானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், பெங்களூரில் வசிக்கும் மிடில் கிளாஸ், தமிழர்கள் பலரும், வெள்ளிக்கிழமை இரவே தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். கடைசி 2 நாட்களில்தான் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவார்கள், அதை மிஸ் செய்ய கூடாது என்பது இதற்கு காரணமாம்.
பிழைப்பு பாதிக்குமே என்று நினைக்கும் ஏழை, எளிய தொழிலாளர்கள் பெங்களூரில் தொழிலை பார்த்தனர். ஆனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அதிமுக மற்றும் திமுக சார்பில், வாகனங்களில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சாப்பாடு, போக்குவரத்து ஆகியவை இலவசம் என்பதோடு, வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தைவிட, அல்லது ஒருநாள் வாங்கும் கூலியைவிட அதிகமாக தொகையும் இவர்கள் கைகளில் அழுத்தி வைக்கப்பட்டதால், சந்தோஷமாக வாக்குப்போட கிளம்பி சென்றுள்ளனர்.
இதனால் பெங்களூரில் இன்று காய்கறி தள்ளு வண்டிகள், காய்கறி கடைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே கண்களில் தென்பட்டன. கட்டிட வேலைக்கு ஆள்கிடைக்காமல் பல இடங்களில் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதையும் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications