சென்னையில் ஐபிஎல் நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்... எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி!
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி எச்சரித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் மீறி நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மஜகவின் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன்அன்சாரி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை நடத்தினால் தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன்அன்சாரி கூறியதாவது: நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கேட்டு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். காவிரிக்காக எல்லோருடனும் இணைந்து போராடுவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்.

காவிரி விவகாரத்தில் அரசியல் பேதம் பார்க்கக்கூடாது. அந்த வகையில் நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து நாங்கள் பங்கேற்கிறோம்.
சென்னையில் வருகின்ற 10ம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருகிறார்கள்.
குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒரு கேடா? அப்படி நடத்தினால் அது தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு.
உடனடியாக தமிழக அரசு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும், மீறி நடத்தினால் மனிதநேய ஜனநாயக கட்சியினரும், காவேரி உரிமை மீட்பு குழுவினரும் மைதானத்திற்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். இதை மீறி அங்கு விளையாட வரும் ஐ.பி.எல் வீரர்களை சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications