79 நாள்.. தனிஅறையில் மகன் கண்முன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மந்திரவாதியின் ‛ச்சீ.. ச்சீ’ செயல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி திருமணமான பெண்ணை 79 நாள் தனிஅறையில் வைத்து மகன் கண்முன்னே பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மந்திரவாதியை போலீசார் தேடும் நிலையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒடிசாவில் பாலாசோர் மாவட்டத்தை சேர்ந்தவர் நடுத்தர வயது பெண். இவருக்கு கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணமான புதிதில் கணவன்-மனைவி மற்றும் குடும்பத்தினர் இடையே எந்த பிரச்சனையும் இல்லை.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பண விஷயம் உள்பட சில விஷயங்களில் அடிக்கடி அந்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தினர் நிம்ம்தியான சூழல் இல்லை.

மந்திரவாதியுடன் சந்திப்பு
இந்நிலையில் கணவரின் குடும்பத்தினர் மயூர்பாஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த எஸ்கே தாரப் என்ற மந்திரவாதியை சந்தித்தனர். மருமகளால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நீக்கி நிம்மதிக்கு வழி செய்ய வேண்டும் அவர்கள் கூறினர். அதற்கு மந்திரவாதி ஒப்புக்கொண்டார்.

மயக்கமருந்து கொடுத்து...
மேலும் பிரச்சனையை முற்றிலுமாக நீங்க வேண்டுமானால் அந்த பெண் தன்னுடன் சில மாதங்கள் தங்க வேண்டும் எனக்கூறினார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் கணவரின் குடும்பத்தினர் அவரை வலுக்கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர் உடன்படவில்லை. இதனால் மயக்கமருந்து கலந்து கொடுத்ததனர். இதனால் அவர் மயங்கினார்.

79 நாள் பலாத்காரம்
சிறிதுநேரம் கழித்து அவர் கண்விழித்தபோது தனி அறையில் குழந்தையுடன் அந்த பெண் இருந்தார். அருகே மந்திரவாதியும் இருந்தார். அப்போது தான் கணவரின் குடும்பத்தினரின் சதிச்செயலை அவர் அறிந்தார். இதைத்தொடர்ந்து மகன் கண்முன்னே அந்த பெண்ணை மந்திரவாதி பலாத்காரம் செய்து வந்தார். இந்த கொடுமை 79 நாட்களாக நடந்தது.

செல்போனில் தகவல்
அறையில் இருந்து பலமுறை தப்பிக்க நினைத்தும் அந்த பெண்ணின் முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மந்திரவாதி தனது செல்போனை அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றார். இதையடுத்து அந்த செல்போன் மூலம் பெண் தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து மீட்கும்படி கூறினார்.

குழந்தையுடன் பெண் மீட்பு
இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர் பெண்ணையும், குழந்தையையும் மீட்டனர். போலீசார் சென்றபோது மந்திரவாதி அங்கு இல்லை. இதனால் அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

விசாரணை
இதுதொடர்பாக போலீசார் பெண்ணின் கணவர், அவரது தம்பி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகின்றனர். இதுதவிர தலைமறைவாக உள்ள மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications