பி.பி., ஷுகர் ஓவராகிவிட்டது, சீக்கிரம் இறக்க விரும்பவில்லை: தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: தனக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் அதிகரித்துள்ளது என்று சர்ச்சைக்குரிய எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் டெல்லியில் வசித்து வருகிறார். அவருடைய சர்ச்சைக்குரிய படைப்புகளால் அவரை நாட்டுக்குள் வர வங்கதேசம் தடை விதித்துள்ளது. இதனால் அவர் 1994ம் ஆண்டில் இருந்து பல நாடுகளில் வாழ்ந்துவிட்டு இறுதியாக டெல்லியில் வந்து குடியேறினார்.
இந்நிலையில் அவர் இன்று காலை ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உடல் எடை கூடிவிட்டது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. டாக்டரை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமாக இறக்க தயாராக இல்லை என்று தெரிவித்திருந்தார்.
சிறிது நேரத்தில் அவர் மீண்டும் ட்விட்டரில் கூறுகையில்,
என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. ஆனால் பரம்பரை வியாதிகள் குறித்து கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் மருத்துவரை சந்தித்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications