சாகித்ய அகாதெமி விருது வாங்கிய டெய்லர்! படித்ததோ 7 ஆம் வகுப்பு! கொரோனாவில் வேலை இழந்தவர்!
புனே: ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் படித்தவருக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி வழங்கும் மராத்தி இலக்கியத்திற்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. இந்தச் செய்தி மராத்தி இலக்கிய வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி வழங்கி வரும் யுவ புரஸ்கார் விருது நாடு முழுவதும் உள்ள 23 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது இளம் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான அடிப்படைத் தகுதி, பரிசு பெறும் எழுத்தாளர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்புக்கான சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் குழு விருதுக்கான எழுத்தாளரைத் தேர்வு செய்யும்.
சாகித்ய அகாதெமி விருது என்றாலே தமிழில் சர்ச்சைகள் நிறைந்த விருது என்ற ஒரு கருத்து உண்டு. விருது வெளியான உடனேயே பலரும் வழங்கப்பட்ட படைப்பின் தரம் குறித்து விவாதிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால், அதற்கு மாறாக இந்த யுவ புரஸ்கார் விருது இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் அதிகம் சர்ச்சையில் சிக்காமல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழில் இந்த ஆண்டுக்கான விருது லோகேஷ் ரகுராமனின் 'விஷ்ணு வந்தார்' நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் கூட விருது கிடைத்தது பற்றி அவரது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், "ஏதோ ஒரு நம்பிக்கையில் அனுப்பி வைத்தேன். என் மேல் இருந்த நம்பிக்கையை விட என் புத்தகத்தின் மீது ஒரு அதீத நம்பிக்கை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக அது மறுக்கமுடியாத பிரதியாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரிந்திருந்தது" என்று அதில் கூறியுள்ளார்.
அவர் கனவு கண்டுகொண்டிருந்ததைப் போலவே விருது 10 மாதங்களுக்குப் பிறகு, தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இவரே பொறியாளர். பி.இ படித்தவர். ஆனால் மராத்தி இலக்கிய வட்டாரத்தில் யார் என்றே தெரியாத ஒரு ஏழைப்பட்ட எழுத்தாளருக்கு இந்த ஆண்டு யுவ புரஸ்கார் விருது கொடுக்கப்பட்டுள்ளதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.
இந்தச் செய்தி, மராத்தி இலக்கிய உலகில் பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் எழுத்தாளரின் பெயர் தேவிதாஸ் சவுதாகர். இவர் ஒரு தையல்காரர். அவரது 'உஸ்வான்' நாவலுக்குத்தான் இந்த ஆண்டு விருது கிடைத்துள்ளது.
தையல்காரர்கள் சமூகத்தின் சோதனைகளையும் இன்னல்களையும் முன்வைத்து தனது நாவலை உருவாக்கி இருக்கிறார் தேவிதாஸ். அதிகம் படிப்பறிவு இல்லாத இவர் இலக்கிய உலகத்திற்கு வந்ததே பெரிய கதை. .
வறுமை காரணத்தால் ஏழாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார் தேவிதாஸ். அதன்பின்னர் தையல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனிடையே 5,000 ரூபாய்க்கு வாட்ச்மேனாக கூட வேலை பார்த்துள்ளார். ஆயத்த ஆடைகள் சந்தைக்கு வந்த பிறகு தையல்காரர்களின் வாழ்க்கை எப்படிச் சுருக்கிவிட்டது என்பதைத்தான் தனது நாவலில் பதியவைத்துள்ளார் இவர்.
கொரோனா காலகட்டத்தில் இவரது ஒட்டுமொத்த வாழ்வும் வேலை இல்லாமல் முடங்கியுள்ளது. கிடைத்த காலத்தை வைத்து முழு நேர எழுத்தாளராக எழுதி வந்துள்ளார்.

2021 வரை கவிதைகளை எழுதி வந்த இவர், 2022 இல் உஸ்வான் நாவலை எழுதி முடித்துள்ளார். நாவலை வெளியிடுவதற்காக 10க்கும் மேற்பட்ட பெரிய பதிப்பகங்களை நாடிச் சென்றுள்ளார்.
ஆனால் நாவலை யாரும் பிரசுரிக்கவில்லை. பலரால் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தகவல்களை தேவிதாஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 10 பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்ட நாவலுக்குத்தான் 2024 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.
பல பதிப்பகங்கள் அவரை ஆதரிக்க முன்வரவில்லை என்றாலும் இறுதியாக தேஷ்முக் முக்தா காட்போல் அண்ட் கம்பெனி இவரது நாவலை 500 பிரதிகளை வரை அச்சிட்டு வெளியிட்டது.
இப்போது 33 வயதான இவர் மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் (முன்பு உஸ்மானாபாத்) மாவட்டத்தில் உள்ள துல்ஜாபூரில் வளர்ந்தார். இது ஒரு வறட்சியான ஊர். ஆகவே வறுமையோடு போராடியுள்ளார் இவர். அவருக்கு என்று சொந்த நிலம் இல்லாததால், இவரது தாத்தாவும், அப்பாவும் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். வசிக்க வீடு கூட இல்லாமல் தற்காலிக குடிசையில் வசித்து வந்துள்ளனர்.
"ஏழாம் வகுப்புக்குப் பிறகு, நான் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டேன். அதன் பிறகு பத்தாம் வகுப்பு வரை இரவு நேரப் பாடசாலைக்குச் சென்றேன். அதற்குள் என் அப்பா ஒரு டெய்லரிங் கடையில் வேலை செய்து வந்தார். நான் அவருக்குப் பகல் நேரத்தில் உதவியாளனாக வேலை செய்தேன்" என்கிறார் சவுதாகர்.
இவர் 2006 இல் ஐடிஐயில் மோட்டார் மெக்கானிக்ஸ் இரண்டாண்டுகள் படித்துள்ளார். ஆனால் 2008 இல் இவருக்கு வேலை இல்லை. வீட்டிலும் வறுமை. அப்போதுதான் தையல் தொழிலுக்குச் சென்றுள்ளார். கூடவே ஜூனியர் கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஆனால் முழுநேர வேலை செய்ததால் படிக்கப் பணமோ நேரமோ இவருக்குக் கிடைக்கவில்லை.
ஆனால், சவுதாகர் மனம் தளரவில்லை. திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே எம்.ஏ (வரலாறு) முடித்தார். வருமானத்தைப் பெருக்குவதற்காக ஆங்கிலம்-மராத்தி ஆகிய மொழிகளைத் தட்டச்சு செய்து வந்தார்.
இவரது எழுத்தின் மீதான ஆர்வம் ஏழாம் வகுப்பில் தொடங்கியுள்ளது. அது இன்று யுக புரஸ்கார் விருது பெறுவதில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. "எங்கள் வீட்டில் வானொலி கூட கிடையாது. அருகிலுள்ள கிராம நூலகத்திற்குப் போய் நான் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தேன். வளர்ந்தவுடன், அண்ணாபாவு சாத்தேவின் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்" என்கிறார் தேவிதாஸ்.
தொடர்ந்து பேசிய அவர், "கவிதைகள் எழுதவும், அதைத் தொகுத்து வெளியிடவும் சிலர் ஊக்குவித்தார்கள். ஆனால், அதை வெளியிடுவதற்கு எனக்கு வசதி இல்லை. வேலை பார்த்து 8,000 ரூபாய் சேமித்தேன். சோலாப்பூர் சென்று 2018இல் கவிதைப் புத்தகத்தைச் சொந்தமாக வெளியிட்டேன். 200 பிரதிகள் அச்சடித்தேன். சிலவற்றைப் பிரபலனான மராத்தி எழுத்தாளர்களுக்கு அனுப்பினேன். பால் சந்திராவுக்கும் அனுப்பினேன்" எனக் கூறியுள்ளார் இந்த விருதாளர்.
இப்போது இவர், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பதைப் பற்றி தனது அடுத்த நாவலை எழுதி வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications