அமெரிக்காவில் டிசிஎஸ் ஊழியரின் 2 மாத ஆண் குழந்தையை எடுத்துச் சென்ற அதிகாரிகள்
ஜெய்பூர்: அமெரிக்காவில் டிசிஎஸ் ஊழியரான இந்தியரின் 2 மாத ஆண் குழந்தையை அவரிடம் இருந்து பிரித்துள்ளனர் அதிகாரிகள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் ஆசிஷ் பாரீக். டிசிஎஸ் ஊழியரான அவர் ப்ராஜெக்ட் விஷயமாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் நியூஜெர்சி நகருக்கு சென்றார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி அவரது மனைவி விதிஷா அஷ்வித் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். டிசம்பர் 23ம் தேதி மருத்துவமனைக்கு செல்லத் தயாராகியபோது விதிஷா கையில் இருந்து குழந்தை கீழே விழுந்தது என்று கூறப்படுகிறது. கீழே விழுகையில் அதன் தலை டிவி ஸ்டாண்டில் பட்டு பின்னர் தரையில் பட்டுள்ளது.

இதில் குழந்தையின் தலையில் அடிபட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் பெற்றோர்கள் தான் தாக்கியிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து குழந்தையை பெற்றோரிடம் இருந்து பிரித்து வளர்ப்பு தாயின் கவனிப்பில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை தாங்கள் தாக்கவில்லை என்றும், தங்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு அதிகாரிகள் குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் ஆசிஷ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தலையிட்டு குழந்தையை மீட்டுத் தருமாறு அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குழந்தையை அதிகாரிகள் எடுத்துச் சென்றதை ஜெய்பூரில் வசிக்கும் ஆசிஷின் சகோதரர் அபிஷேக் பாரீக் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications